பச்சைக் கிளி சரணாலயம்

பச்சைக் கிளி சரணாலயம்

கிளிகளை பார்ப்பது மிகவும் அபூர்வம், கிராமப்புறங்களிலே கூட அவற்றை பார்பது அபூர்வமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் ஆயிரக்கணக்கில் கிளிகள் பேட்ச் பேட்சாக வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. கிளிகளுக்கு உணவு வைக்கும் அந்த வீட்டின் வசிப்பவரான கேமரா டெக்னீசியன் சேகர் தினமும் அறுபது கிலோ அரிசியை சுத்தம் செய்து பரிமாறுவதாகவும், இது தன்னுடைய வருமானத்தில் நாற்பது சதவீதம் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தேடி வரும் கிளிகளுக்கும் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ தங்களால் முடிந்த உதவிகளை செய்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த சரணாலயம் பச்சை கிளிகளால் நிரம்பியிருக்கும். 
Published on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com