39வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லனை ஆகிய இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.