தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 87.7% மாணவர்களும், 94.1% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே, மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்பித்துள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட உள்ளதாகவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.