முப்படைகளின் தலைமைத் தளபதியாக விபின் ராவத் நியமனம்
நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி விபின் ராவத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பிபின் ராவத், இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.
நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுபெறுவதை ஒட்டி, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார்.
புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முப்படைத் தளபதி விபின் ராவத்.