மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் முடங்கியதால் புது தில்லியில் விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வழங்கிய கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸின் புகைப்படம்.-
விண்டோஸ் செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமான சேவையிலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்புக்கு காரணமாக செக்-இன் பாதிக்கப்பட்டதால் தனது போர்டிங் பாஸைக் காட்டும் பயணி ஒருவர். இடம்: கொல்கத்தா விமான நிலையம்.-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்புக்கு காரணமாக செக்-இன் பாதிக்கப்பட்டதால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் காத்திருப்பு. இடம்: கொல்கத்தா விமான நிலையம்.-
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்புக்கு மத்தியிலும், வயதான பயணிக்கு உதவும் விமான நிலைய அதிகாரி ஒருவர்.Shailendra Bhojak
சென்னை விமான நிலையத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு காரணமாக விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள்.-
கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்த பயணிகள். Kunal Patil
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வணிகங்களின் செயல்பாடுகளை பாதித்துள்ள நிலையில், ஜம்மு விமான நிலையத்தின் முன்பதிவு கவுண்டரில் குவிந்த பயணிகள்.-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்புக்கு மத்தியிலும், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் முன்பதிவு கவுண்டரில் காத்திருக்கும் பயணிகள்.-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் செக்-இன் பாதிக்கப்பட்டதால், தவிக்கும் பயணிகள். இடம்: கொல்கத்தா விமான நிலையம்.-
தில்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய விமான நிலைய அதிகாரிகள்.-
கையில் போர்டிங் பாஸ்களுடன் ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள். -
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி 3 முனையத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சித் திரையை கடந்து செல்லும் பயணி.Arun Sharma
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி 3 முனையத்தில் விமான அட்டவணையைக் காட்டும் தொலைக்காட்சித் திரையை உற்று நோக்கும் பயணி.Arun Sharma
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி 3 முனையத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்புக்கு பிறகு, நீலத் திரை காட்டும் தொலைக்காட்சித் திரைகள்.Arun Sharma
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டி 2 முனையத்தில் உள்ள செயலிழந்த கணினி.-