உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வீரத்தை பரைசாற்றும் வகையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
சாகச நிகழ்ச்சியை மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசிப்பார்கள் என்று விமானப்படை அதிகாரிகள் கணிப்பு.
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண கடற்கரை பகுதியில் குடும்பம் குடும்பங்களாக மக்கள் குவிந்ததால் சென்னையே குலுங்கியது.
மெரீனா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண், சாரங் ஹெலிகாப்டர்கள், பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட், தேஜஸ், ரபேல் மற்றும் மெரினா உள்ளிட்ட 72 விமானங்கள் கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி அனைவரும் ரசித்தனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வான் சாகசங்கள் புரிந்தன.
விமானத்திலிருந்து பாராசூட் மூலம், மூவண்ண கொடியுடன் சாகசம் செய்தபடி மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து இருந்த பகுதியில் வீரர்கள் தரையிறங்கி சாகசங்கள் புரிந்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரும் மெரினா கடற்கரை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.