வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, அவரது மறைவையொட்டி போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கனக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய நிலையில், போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ANI
போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.ANI
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன், பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவியான மெலனியா டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அவரது மனைவி ஒலெனா ஜெலென்ஸ்கா ஆகியோர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்டோர்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அவரது மனைவி ஒலெனா ஜெலென்ஸ்கா உடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த பிரிட்டன் இளவரசர் வில்லியம்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்.
போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற வந்த மக்கள் கூட்டம்.
இறுதிச் சடங்கில் நிரம்பி வழிந்த புனித பீட்டர் சதுக்கம்.