கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்
79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.R Senthilkumar
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.R Senthilkumar
சரியாக இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.R Senthilkumar
காவல்துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.R Senthilkumar
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சுதந்திர தின விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.R Senthilkumar
இந்திய பாரா-பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.R Senthilkumar
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.R Senthilkumar
சுதந்திர தின விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். R Senthilkumar