
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை லியோனல் மெஸ்ஸி பார்வையிட்டார்.
ஜாம்நகரில் 3000 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள வந்தாரா, காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட விலங்குகளின் காப்பகமாக இருந்து வருகிறது.
லியோனல் மெஸ்ஸியை சிறப்பிக்கும் விதமாக, குட்டி சிங்கம் ஒன்றுக்கு லியோனல் எனப் பெயர் சூட்டப்பட்டது.
வந்தாராவில் விலங்குகளுடன் மெஸ்ஸி விளையாடுவதும், தடவிக் கொடுப்பதுமான காட்சிகள் இணையத்தை நெகிழ வைத்தன.
வந்தாரா விலங்குகளுக்கு பழங்களும் ஊட்டி விட்டார், மெஸ்ஸி.
மெஸ்ஸிக்கு சுமார் ரூ. 10.9 கோடி மதிப்புள்ள ரிச்சர்ட் மில்லி கைக்கடிகாரத்தையும் ஆனந்த் அம்பானி அன்பளிப்பாக வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.