தேசியக் கொடியேற்றினார் ஆளுநா் ஆா்.என். ரவி - புகைப்படங்கள்
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.ANI
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.ANI
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.R Senthilkumar
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பூங்கொத்து கொடுத்து, கைகுலுக்கி வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.R Senthilkumar
76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.