பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - புகைப்படங்கள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சோ்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று (மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.NASA
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் இந்திய நேரப்படி இன்று (மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது.ANI
டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கார்புனோவ் ஆகிய 4 வீரர்களும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.ANI
ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டனர்.ANI
சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய விண்கலன்.NASA TV
கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கிய பாதுகாப்பு குழுவினர்.ANI
பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய விண்கலன்.ANI
தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் முன்.ANI