தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு - 2025 தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இடமிருந்து இரண்டாவதாக மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர்.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு 2025, தொடக்க விழாவில், விவசாயிகள் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை மாலை அணிவித்து கெளரவிப்பு. அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.SD Subbu
கண்காட்சியின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உடன் கலந்துரையாடும் விவசாயிகள் குழுவினர்.
கண்காட்சியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.
விவசாயிகளின் தைரியத்தையும் மாற்றத்தைத் தழுவும் அவர்களின் வலிமையையும் பாராட்டிய பிரதமர் மோடி.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு - 2025 தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஏராளமான தமிழக விவசாயிகள்.
கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை.ANI
கோவை விமான நிலையம் முதல் அரங்கம் வரை செல்லும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.