உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, ஸ்டாலினை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.