4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - புகைப்படங்கள்

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் ராஜஸ்தானில் பதிவான வாக்குகளின் மாலை 3.44 மணி நிலவரம்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தெலுங்கானாவில் பதிவான வாக்குகளின் மாலை 3.40 மணி நிலவரம்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மத்தியப் பிரதேசத்தில் பதிவான வாக்குகளின் மாலை 3.35 மணி நிலவரம்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சத்தீஸ்கர் பதிவான வாக்குகளின் மாலை 3.30 மணி நிலவரம்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 4-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சித்தி குமாரிக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தொண்டர்கள்.

230 தொகுதிகளில் பாஜக 162 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், இந்தூரில் சங்கு முழங்கி கொண்டாடிய பாஜக தொண்டர்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதை அடுத்து கொண்டாடிய தொண்டர்கள்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வெறிச்சோடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம்.

தனது ஆதரவாளர்களுடன் கான்பூரில் கொண்டாடிய கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே.

தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கொண்டாடிய ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வித்யாதர் நகர் பாஜக வேட்பாளரான தியா குமாரி.

வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு இனிப்பு ஊட்டிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜக தொண்டர்கள்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தங்கள் பதவிகளை இழக்க உள்ள பி.ஆர்.எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் தலைவர்களான பூபேஷ் பாகெல் மற்றும் அசோக் கெலாட்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது உற்சாகத்தில் கொண்டாடிய பாஜக தொண்டர்கள்.

பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பால்முகுந்த் ஆச்சார்யா கட்சி அலுவலகத்திற்கு வந்த போது அவரை சுழ்ந்த தொண்டர்கள்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT