திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைகிறது. முதலில் சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பல்வேறு பதவிகளை வகித்த மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக அரியணை ஏறிய தினம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, சட்டப்பேரவையில் அரசின் சாதனைகளைத் தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சென்னை மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர்.
அரசு செய்து முடித்த பணிகள், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகரான அப்பாவு.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மகளிர் நலன் கருதி பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணத்திற்கு அனுமதி.
கரோனா பெரும்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்து தமிழக அரசு உத்தரவு.