பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - புகைப்படங்கள்
இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக சென்னையிலிருந்து தில்லிக்கு புறப்பட்டு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.ANI
தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விடுவிப்பது, மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவை பிரதமரிடம் வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.ANI
செளத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்துக்கான நிதிகளை விடுவிக்கக் கோரி மனு அளித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.ANI
புதுதில்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ANI
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர்.ANI
பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.ANI