ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம் - புகைப்படங்கள்
கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தியவர் ரெடின் கிங்ஸ்லி. இந்நிலையில் சீரியல் நடிகை சங்கீதாவை இன்று (டிசம்பர் 10) திருமணம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் ஒருவராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து கரம்பிடித்துள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தியவர் ரெடின் கிங்ஸ்லி.
இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ள நிலையில், இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஜினியின் அண்ணாத்த, விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சீரியல் நடிகையான சங்கீதாவை இன்று (டிசம்பர் 10) திருமணம் நடைபெற்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடன இயக்குநர் சதீஷ் தனது X வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை சங்கீதா, விஜய் நடித்த மாஸ்டர், எல்.கே.ஜி, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களிலும் சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ளார்.