21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 77 கிலோ பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வாழ்த்து தெரிவித்துள்ளார்.