டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் தரப்பில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. 185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களையே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.