டாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..

நியூஸிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தது. அஜின்க்யா ரஹானேவும், ரிஷப் பந்த்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 2-ஆம் நாள் ஆட்டத்தில் ரஹானே - பந்த் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்தால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஹானேவின் மிகத் தவறான அழைப்பால் ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனார். இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரஹானேவும் ஒரு கட்டத்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதேபோல் தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து 39 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. ரஹானே 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹனுமா விஹாரி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த இணை நாளைய (திங்கள்கிழமை) 4-ஆம் நாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணியை அதிக முன்னிலைப் பெறச் செய்தால் மட்டுமே தோல்வியைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உருவாகும். எனவே, முதல் இன்னிங்ஸைப் போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி ரஹானேவையே நம்பியிருக்கிறது.
டாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com