பவர் பிளேவின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங்கை அறிமுகப்படுத்தினார் ராகுல். இதற்குப் பலனாக 3-வது பந்திலேயே லீவிஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
17-வது ஓவரை வீசிய ஷமி 4 ரன்களை மட்டுமே கொடுத்து ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் சேதன் சகாரியா ஒரு பவுண்டரி அடித்தாலும் அடுத்த பந்திலேயே 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் துரிதமாக 25 ரன்கள் சேர்த்து அர்ஷ்தீப் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.