ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழாவின் போது சென் நதியில் படகுகள் மூலம் பயணிக்கும் பிரதிநிதிகள்.
இந்திய நேரப்படி இரவு 11 மணியளவில் சென் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா. David Goldman
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பிரெஞ்சு மாலியன் பாடகி அயா நகமுராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ANI
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா தொடங்குவதற்காக முன் காத்திருக்கும் பார்வையாளர்கள்.-
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த அதிபர் டோனி எஸ்டான்குட், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக் ஆகியோர்.Joel Marklund / POOL
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான ஜெய்ஸ்மின் லம்போரியா.ANI
தொடக்க விழாவில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினருமான நீதா அம்பானி.ANI
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பி.வி.சிந்து மற்றும் அசந்தா சரத் கமல் ஆகியோர்.ANI
ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த இந்திய குழுவினர்.ANI
ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பி.வி. சிந்து.ANI
பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்லும் பார்வையாளர்கள்.FRANCK ROBICHON
தொடக்க விழா நடைபெறும் இடத்தில் உள்ள பார்வையாளர்கள் கூட்டம்.-
இந்திய அணி வீரர்கள்.ANI
விழாவைக் காண வரும் பார்வையாளர்கள்.-
சென் நதியில் தேசியக் கொடிகளை அசைத்து படகில் வரும் இந்திய வீரர்கள். நதியின் இரு பக்கமும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டனர். -
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது சக வீரர்களுடன் சொகுசு படகுகளில் வரும் இந்திய வீரர்கள்.-
பாரம்பரிய நடனம், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வாண வேடிக்கைகள், வண்ணவிளக்குகள் என பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.-