7.1.1976: 3 மணிநேரம் 10 ரயில்களை நிறுத்திய காக்கை!

சாதாரண கருங்காக்கை ரயில் போக்குவரத்தை சீர்குலைத்தது பற்றி...
7.1.1976
7.1.1976
Updated on
1 min read

கல்கத்தா, ஜன. 5 - சாதாரண கருங்காக்கை ஒன்று ரயில் போக்குவரத்தை சீர்குலைத்து 3 மணி நேரத்துக்கு 10 ரயில்களை நிறுத்திவிட்டது!

பாலிகஞ்சு ஸ்டேஷன் அருகே பறந்து சென்ற ஒரு காக்கை மேலிருந்த மின் கம்பிகள் ஒன்றோடொன்று உராயும்படி செய்ததால் “ஸ்விட்சு போர்டு” வெடித்து அப்பகுதி முற்றிலும் மின் சப்ளையை துண்டித்தது.

இதனால் காலை நெரிசல் நேரத்தில் 3 மணி நேரம் மின்சார ரயில்கள் போய்வர முடியாமல் நின்றுவிட்டன. மொத்தம் 10 ரயில்கள் நின்றன.

மதுரை, முகவையில் செயற்கைமழை சோதனை - 2, 3 தினங்களில் துவங்கும்: முதன்மந்திரி தகவல்

சென்னை, ஜன. 6 - மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் செயற்கை மழை சோதனைகள் நடத்தப்படுமென்று மாநில முதல்வர் திரு. கருணாநிதி இன்று கூறினார். சென்னை நகரில் சென்ற ஆண்டு சோதனை நடத்திய அமெரிக்க நிபுணர்கள் இந்த சோதனைகளை நடத்துவர் என்றார்.

திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் மழைக்குறைவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதிகள் அதிகரிக்கப்படுமென்றார். அபிவிருந்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் இன்று இங்கு நிருபர்களிடையே பேசுகையில் கூறினார்.

இந்த திட்டங்களுக்கான செலவு குறித்து பிரதம காரியதரிசி திரு. பி. சபாநாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட இலாகாக்களின் காரியதரிசிகள் இப்பொழுது விவரங்களைத் தயாரித்து வருகின்றனர்.

முன்னதாக அவர் ரெவினியூ மந்திரி திரு. எஸ். மாதவனுடனும் மற்ற அதிகாரிகளுடனும் பேசினார்.

மதுரை, முகவை ஜில்லாக்களில் செயற்கைமழை சோதனைகள் வெற்றி பெறுவதை பொருத்து அது மற்ற ஜில்லாக்களுக்கு விஸ்தரிக்கப்படும் என்றார்.

தேர்தல் ஒத்திவைப்பு: நடப்பு கூட்டத்திலேயே பார்லிமெண்ட் முடிவெடுக்கும்

புதுடில்லி, ஜன. 6 - மக்கள்சபைக்கும், சில அசெம்பிளிகளுக்கும் தேர்தல்களை ஒத்திப்போடுவது குறித்து நடப்பு பார்லிமெண்ட் கூட்டத் தொடரிலேயே ஒரு இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்று சட்டமந்திரி எச்.ஆர். கோகலே இன்று கூறினார்.

ஒத்திப்போடக்கோரும் சண்டீகர் காங்கிரஸ் தீர்மானம் குறித்து பேசிய கோகலே இவ்விஷயத்தில் இன்னும் சர்க்கார் ஒரு முடிவு எடுக்கவில்லை என்றும் ஒரு முடிவுக்கு வந்த பிறகே சர்க்கார் நிலை தெரியுமென்றும் கூறினார். ...

... (தமிழ்நாட்டில் ஒன்று உட்பட மக்கள் சபைக்கு 11 ஸ்தானங்களுக்கும், தமிழ்நாட்டில் ஒன்று உட்பட மாநில அசெம்பிளிகளில் 79 ஸ்தானங்களுக்கும் உபதேர்தல்கள் நடக்க வேண்டியிருக்கிறது.)

Summary

7.1.1976: A crow stopped 10 trains for 3 hours.

7.1.1976
6.1.1976: கலப்பட குற்றத்திற்கு ஆயுள் தண்டனை - பார்லிமெண்ட் கூட்டு கமிட்டி சிபாரிசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com