28.1.1976: தி.மு.க. எம்.பி. அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

தி.மு.க. எம்.பி. அ.தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி...
28.1.1976
28.1.1976
Updated on
1 min read

புதுடில்லி, ஜன. 27 - ராஜ்ய சபையில் தி.மு.க. உறுப்பினராக உள்ள திரு.வி.சி. சுவாமிநாதன் தி.மு.க.விலிருந்து ராஜினாமா செய்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.க. பார்லிமெண்டரி கட்சி பொருளாளர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

தி.மு.க. ஒரு வகுப்புவாதக் கட்சியாக மாறிவிட்டதாகவும் வகுப்புவாத சக்திகளுக்கு திரு. கருணாநிதி ஆதரவளிப்பதாகவும் திரு. சுவாமிநாதன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார். அவசரநிலைப் பிரகடனத்தையும் அவர் வரவேற்றுள்ளார்.

இத்துடன் ராஜ்ய சபையில் அண்ணா தி.மு.க.வின் பலம் மூன்றாக உயருகிறது. லோக் சபையில் 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெட்ரோல் ‘பங்க்’ மூலம் அத்தியாவசிய பொருள் விற்பனை - அரசு பரிசீலனை

புதுடில்லி, ஜன. 27 - இப்பொழுதுள்ள பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்) மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக ரசாயன, உர மந்திரி திரு. பி.சி. சேத்தி இன்று லோக் சபையில் கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.

பின் தங்கிய பகுதிகளில் சுமார் 400 நிலையங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளன. கண்ட்ரோல் துணி, சைக்கிள்கள், ஸ்கூட்டர் டயர், சோப்பு, மருந்துகள் போன்றவை அங்கு விற்கப்படும்.

பஹல்கார், ஜக்தீஷ்பூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே இதுபோன்ற விற்பனை நிலையங்கள் உள்ளன.

Summary

28.1.1976: DMK MP joined the AIADMK.

28.1.1976
27.1.1976: "பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கியம்” - தேர்தல் ஒத்திவைப்பு பற்றி இந்திரா காந்தி பேட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com