2.2.1976
2.2.1976

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி...
Published on

சென்னை, பிப். 1 - தமிழ்நாடு முழுதும் எல்லாப் பொதுக் கூட்டங்களுக்கும் இன்றிருந்து 14 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வடாற்காடு மாவட்டம் முழுவதிலும் பொதுக் கூட்டங்கள், ஊர்வகங்களை நடத்தக்கூடாது என்று கி பு கோ 144வது பிரிவின் கீழ் மாவட்ட கலெக்டர் ராமநாதன் 14 தினங்களுக்குத் தடை உத்திரவைப் பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பழைய காங்கிரஸ் (இணைப்பு ஆதரவு) செயற்குழு ராஷ்டிரபதி ஆட்சிப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை நகரில் ஊர்வலங்கள் நடத்த தடை

சென்னை நகரில் ஊர்வலங்களனைத்தும் இவ்வருடம் ஏப்ரல் 30 வரை தடை செய்யப்பட்டிருக்கின்றன. திருமணங்கள், சமய கூட்டங்கள், இறுதி சடங்கு ஆகியவை தவிர இதர கூட்டங்களும் 14 தினங்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கின்றன.

Summary

A ban on gatherings throughout Tamil Nadu.

2.2.1976
1.2.1976 - தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி - சட்டசபையும் கலைப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com