

புதுடில்லி, ஜன. 30 - டெலிபோன் சம்பாஷணைகள் “ஒட்டுக் கேட்கப் படுவதில்லை” என்று ராஜ்ய சபையில் தகவல் தொடர்பு மந்திரி சங்கர் தயாள் சர்மா இன்று உறுதி கூறினார்.
புபேஷ் குப்தா (வ. கம்யூ.) பேசுகையில், டெலிபோன் சம்பாஷணைகள் “அதிக அளவில் ஒட்டுக்கேட்கப்படுவதாக” புகார் கூறியதை மறுத்து மந்திரி பதில் அளித்தார்.
ராஜ்ய சபை மெம்பர்கள் டெலிபோன் பில்கள் பற்றிய விவரங்கள் அளிக்குமாறும் இதில் யாருக்கு மிக அதிகமாக பாக்கி இருக்கிறதென்றும், புபேஷ் குப்தா கேட்டார். இதற்கான பதில் உறுப்பினருக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என மந்திரி பதிலளித்தார்.
சென்னை, ஜன. 29 - எவ்வளவு கவலை இருந்தாலும் அதனை மறக்கச் செய்வது நகைச்சுவை. அந்த நகைச்சுவையையே சாவி தமது வாழ்க்கைப் பாதையாக அமைத்துக் கொண்டவர் என்று முதலமைச்சர் கருணாநிதி இன்று குறிப்பிட்டார்.
தினமணி கதிர் ஆசிரியர் சாவியின் (சா. விசுவனாதன்) மணி விழா இன்று மயிலை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் அமைச்சர் கருணாநிதி விழாவிற்குத் தலைமை வகித்தார். அமைச்சர்களும், நகரப் பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
சென்னை நகர ஷெரீப் ஆர். ராமகிருஷ்ணன் விழாக் குழுவினரின் சார்பில் எல்லோரையும் வரவேற்றுப் பேசுகையில், தமது சொந்தத் திறனால் சிறப்பான நிலையை எய்தியவர் என்று சாவியைப் பாராட்டினார்.
தொழிலாளர் நல அமைச்சர் கே. ராஜாராம் பேசுகையில், “வாஷிங்டனில் திருமணம்” சாவியின் சிறந்த நகைச்சுவைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என்று புகழ்ந்தார்.
மணிவிழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரை அமைச்சர் வெளியிட்டார்.
விழா குழு சார்பில் சாவிக்கு பொன்னாடை போர்த்தி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் க. அன்பழகன் சாவியை ஒரு நல்ல சிந்தனை எழுத்தாளர் என்று வர்ணித்தார். ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.