புதுடில்லி, ஜூன் 26 - இந்தியாவுக்கும் ஈரானுக்குமிடையே நேரடி செயற்கை கோள் தகவல் இன்று இங்கு விழா ஒன்றில் துவக்கிவைக்கப்பட்டது.
மத்ய செய்தி போக்குவரத்து மந்திரி எஸ். டி. சர்மா இந்நவீன சாதனம் மூலம் டெஹ்ரானில் ஈரான் செய்தி போக்குவரத்து மந்திரியுடன் முதல் தொலைபேசி தொடர்புகொண்டார். ராஷ்டிரபதி பக்ருதின் அலி அகமது ஈரானுக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில் இந்நவீன தொடர்பு ஏற்பட்டிருப்பது மிகவும் நல்ல சகுனம் என்று சர்மா கூறினார்.
பிரதம மந்திரி இந்திரா காந்தியின் வாழ்த்துக்களையும் இந்திய சர்க்காரின் வாழ்த்துக்களையும் இந்திய மக்களின் வாழ்த்துக்களையும் ஈரான் மன்னருக்கும் ஈரான் அரசுக்கும் ஈரான் மக்களுக்கும் டாக்டர் சர்மா தெரிவித்தார்.
ஈரானில் ராஷ்டிரபதி அகமத் பேச்சு - இருதரப்பு உறவுகள் வலிமை பெறுவது பற்றி மகிழ்ச்சி
டெஹ்ரான், ஜூன் 26 - வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கு பிராந்திய அடிப்படையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்றும், அமைதியான பாதுகாப்பான பிராந்தியச் சூழ்நிலை வெளிச் சக்திகள் தலையிடும் சாத்தியக்கூற்றை அகற்றிவிடும் என்றும் ஈரான் மன்னர் ஷா கூறுவதை ராஷ்டிரபதி பக்ரூதீன் அலி அகமது இன்று வரவேற்றார்.
தனது தேசீய வளங்கள் மீது முழு ஆதிக்கம் பெறவும், விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் எல்லையற்ற வாய்ப்புகளை பயன்படுத்தவும் ஈரான் செய்யும் முயற்சிகளுக்கு இந்தியாவின் முழு ஆதரவு உண்டு என்று ராஷ்டிரபதி தெரிவித்தார்.
இன்றிரவு மன்னர் ஷா ராஷ்டிரபதி பக்ரூதீன் அலி அகமதுக்கு விருந்தளித்தார். அந்த விருந்தின் போது ராஷ்டிரபதி பேசினார்.
இந்தியாவும் ஈரானும் இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதில் மட்டுமின்றி, அமைதி, ஒத்துழைப்புச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அக்கறை கொண்டிருக்கின்றன என்று ராஷ்டிரபதி கூறினார். இந்து மகா சமுத்திரத்தை வெளிநாட்டு ராணுவங்களின் இருக்கையோ அல்லது போட்டா போட்டியோ இல்லாத சமாதான மண்டலமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று இந்தியாவும் ஈரானும் கோருவதை அவர் வலியுறுத்தினார்.
பரஸ்பர சார்பு, சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய உலக பொருளாதார முறையை உருவாக்க வேண்டும் என்பதை இந்தியாவும், ஈரானும் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். ...
Summary
27.6.1976: Direct satellite communication between India and Iran commenced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

26.6.1976: த. நா. நகரசபைகள் பதவிக்காலம் ஜூன் 30 முடிகிறது







