புது டில்லி, மே.18 - இந்தியா, பாகிஸ்தான் இடையே ஜூலை 17, 24 தேதிகள் இடையே விமான, ரயில், ரோடு போக்குவரத்து மீண்டும் ஏற்படும் போது கிட்டத்திட்ட அதே சமயத்தில் ராஜதந்திர உறவும் இரு நாடுகள் இடையே ஏற்படும்.
இதை இன்று வெளி விவகார மந்திரி சவாண் பார்லிமெண்டில் கரகோஷத்துக்கு இடையே அறிவித்தார்.
இரு சபைகளிலும் அவர் அறிக்கை விடுத்தார். இஸ்லாமாபாத்தில் மே 12 முதல் 14 வரை அரசு செயலாளர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுக்கு வழி கோலிய நிகழ்ச்சிகளை அவர் விவரித்து, அங்கு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் பிரதிகளை தாக்கல்செய்தார்.
இந்திரா காந்தி, பூட்டோ இடையே பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்ட மூன்று கடிதங்களின் பிரதிகளையும் சவாண் தாக்கல் செய்தார்.
இந்த சாதகமான நிகழ்ச்சிகள் இந்த சபையாலும், இருதேச மக்களாலும், இரு தேசங்களின் நண்பர்களாலும் வரவேற்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து தன் அறிக்கையை அவர் முடித்தார்.
தாங்கள் பரஸ்பரம் சார்ந்துள்ளதையும், அண்டை நாடுகள் இடையே ஒத்துழைப்புக்கு அவசியம் இருப்பதையும் இரு நாடுகளும் உணர வேண்டும் என்று சவாண் கூறினார். ...
மதுவிலக்குச் சட்ட அமல் பற்றி ஐ. ஜி. கருத்து - கடும் தண்டனை மூலம்தான் கோரும் பலன் கிடைக்குமென்கிறார்
கோவை, மே, 18- தமிழ்நாட்டில் குற்ற விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்திருக்கிறதென்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் எப்.வி. அருள் இன்று இங்கு கூறினார்.
சென்ற ஆண்டில் இதே கால அளவுடன் ஒப்பிடுகையில், குற்றங்கள் 9 சதவிகிதம் குறைந்துள்ளது என்று சமீபத்தில் வெளியான மதிப்பீடு கூறியது.
தமிழ்நாட்டில் சட்டம், அமைதி நிலவரம் திருப்திகரமாக இருக்கிறதென்றும் ஐ. ஜி. கூறினார். அவசர நிலை அமல் பலன்கள் பற்றி அவர் விமர்சித்தார்.
மதுவிலக்கு அமல்பற்றிக் குறிப்பிடுகையில். இதன் அமல் தனக்கு திருப்தியளிக்கும் அளவுக்கு அமையவில்லை என்றார். மது விலக்குச் சட்டத்தை மீறுவோர்களுக்கு கடுமையான தண்டனை விதித்தால்தான் விரும்பும் பலன் கிட்டுமென்று கருத்துத் தெரிவித்தார்.
கள்ளச் சாராயக் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட 200 வண்டிகளில் 4 வண்டிகளை மட்டுமே பறிமுதல் செய்ய கோர்ட்டுகள் உத்தரவிட்டன வென்று சுட்டிக்காட்டினார். வண்டிகளைப் பறிமுதல் செய்ய மதுவிலக்குச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டினர். ...
Summary
May 19, 1976: India-Pakistan Agreement to be Implemented July 17–24!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









