பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

20.5.1976: ரயிலில் ஆறு மாதம் மூன்கூட்டி ரிசர்வ் செய்யும் முறை அமல்

ரயிலில் ஆறு மாதம் மூன்கூட்டி ரிசர்வ் செய்யும் முறை அமல் பற்றி...

News image

20.5.1976 - Dinamani

Updated On :20 மே 2026, 4:06 am IST

சென்னை, மே. 19 - தென் பிராந்திய ரயில்வேயில் எல்லா ரயில் நிலையங்களிலும் எந்த ஒரு வண்டிக்கும் எந்த ஒரு வகுப்புக்கும் 6 மாதம் முன்கூட்டி ரிசர்வ் செய்யும் முறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதனை உடனடியாக அமல்படுத்த உத்தரவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரையில் சென்னையைப் பொறுத்த வரையில் (நாட்டின் மற்றும் சில பெரும் நகரங்களிலும்) காலவரம்பின்றி எந்த தேதிக்கு வேண்டுமானாலும் ரிசர்வ் செய்யலாம் என்ற முறை இதுவரை இருந்து வந்தது.

தென் பிராந்திய ரயில்வேயின் இதர ரயில் நிலையங்களில் இது வரை 20 நாள் முன்கூட்டி ரிசர்வ் செய்யலாம் என்று இருந்து வந்தது.

சென்னையில் 1975 ஏப்ரல் 15ந் தேதியிலிருந்து இதுவரை அமலில் இருந்த ஏற்பாடு கைவிடப்பட்டு 6 மாத வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உள்ளது. அதாவது ஒரு சிலரே 6 மாதத்துக்குப் பிறகு உள்ள காலத்துக்கு ரிசர்வ் செய்தனர். தவிர மிக நீண்ட காலத்துக்கு ரிகார்டுகளை வைத்து வருவதில் செலவு அதிகம் ஏற்பட்டது.

சென்னையில் ரிசர்வ்வேஷன் பாணியை ஆராய்ந்ததில் பெரும்பாலோர் தங்களது பயணத்தை அதிக பட்சம் 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னதாகத்தான் தீர்மானிக்கின்றனர்.

சென்னை சென்டிரலில் பம்பாய் தாதர் எக்ஸ்பிரஸில் பொதுவில் 30 நாட்களுக்கு முன்னதாக எல்லா இடங்களும் ரிசர்வ் ஆகிவிடுகின்றன. மற்ற வண்டிகளில் 20 நாட்களுக்கு முன்னரும் சில சீட்டுகள் கிடைக்கின்றன. பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் 5 அல்லது 6 நாட்களுக்கு முன்னதாக இடங்கள் புக் ஆகிவிடுகின்றன. ...

இந்திய பஞ்சாங்கத்துக்கு வெளிநாடுகளில் கிராக்கி

கல்கத்தா, மே.19- இந்தியப் பஞ்சாங்கங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கத்தில் நேரங்களை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? குறிப்பிட்ட தினங்கள் சுபதினங்கள் என்றும் அசுப தினங்கள் என்றும் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதை விசாரித்து இங்குள்ள இந்திய வானாராய்ச்சி சங்கத்துக்கு விசாரணைகள் வந்து கொண்டிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர் நிர்மல் சந்திரலாகிரி இத்தகவலைக் கூறினார்.

நியூயார்க் வாசி ஒருவர் தாம் இந்தியாவுக்கு வரவிரும்புவதாகவும், அதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துச்சொல்லுமாறும் கேட்டிருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள கெளடி மடத்துச் சீடர்கள், "ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசி என்று வருகிறது?" என்று விசாரித்திருக்கிறார்கள்.

இந்திய வெளியீட்டு நூல்களில் அதிகம் விற்பனையாவது பஞ்சாங்கம் தான். மேற்கு வங்கத்தில் மட்டும் 1976 ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிந்த வங்காளி ஆண்டில் சுமார் 7,00,000 பஞ்சாங்கங்கள் விற்பனையாயின. அதற்கு முந்திய ஆண்டில் இந்த விற்பனை 6,00,000.

சில மேல்நாடுகள் தங்களுடைய மக்களின் உபயோகத்துக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு பஞ்சாங்கங்களை இறக்குமதி செய்கின்றன.

Summary

System for reserving train tickets six months in advance implemented.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.