மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

25.5.1976: சென்னையில் முற்பகல் முழுதும் அனல்காற்று - 109 டிகிரி வரை எட்டியது

சென்னையில் முற்பகல் முழுதும் அனல்காற்று வீசியது பற்றி...

News image

25.5.1976 - Dinamani

Updated On :25 மே 2026, 4:00 am IST

சென்னை, மே. 24 - இன்று முற்பகல் முழுதும் சென்னை நகரத்தையும், சுற்று வட்டாரத்தையும் அனல்காற்று வறுத்து எடுத்து விட்டது. பிற்பகல் 2-20 மணிக்கு கடற் காற்று திரும்பிய பிறகுதான் வெப்பத்தின் கொட்டம் அடங்க ஆரம்பித்தது.

நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பம் 108 டிகிரி தான். நேற்று 104 டிகிரி. 4 டிகிரி அதிகம்.

மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பம் 109.1 டிகிரி. நேற்று 106.4 டிகிரி. 2.7 டிகிரி அதிகம். ...

... மக்கள் வெளியில் தலை காட்டவே பயந்தனர். அடுத்தடுத்து மூன்று நாட்களாக இவ்வாறு வெய்யில் கொளுத்தி வருகிறது.

ஆந்திராவில்

பத்ராசலம், மே. 24 - பத்ராசலத்தில் இன்றைய வெப்பம் 117.2 டிகிரியை எட்டியது. இந்த யாத்திரைத் தலம் அனலாகக் கொதித்தது.

கம்மம் ஜில்லாவில் அனல் காற்று தாங்காமல் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர்.

5 ஆண்டில் மீதி 6 லட்சம் ஸ்ரீலங்கா அகதிகள் இந்தியா திரும்புவர்

சென்னை, மே. 24 - ஸ்ரீலங்காவிலிருந்து 1981க்குள் இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டிய 8 லட்சம் பேர்களில், கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் பேர்களே வந்துள்ளனர் என்றும், பிராவி டெண்ட் நிதி பாக்கி, நஷ்டஈடு பிரச்னைகள் இதன் காரணம் என்றும் மத்திய சப்ளை, மறு வாழ்வு அமைச்சர் ராம் நிவாஸ் மிர்தா இன்று நிருபர்களிடம் கூறினார்.

சீக்கிரத்தில் இந்தப் பிரச்னைகள் தீர்ந்து பாக்கியுள்ள 6 லட்சம் பேர்கள் 5 ஆண்டுகளில் இந்தியா திரும்புவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா திரும்பியவர்களில் தமிழ்நாட்டில் 20000 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. 2 கூட்டுறவு பஞ்சாலைகள் உள்பட 12 பஞ்சாலைகளில் இலங்கை அகதிகள் சிலருக்கு வேலையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9300 ஏக்கர் நிலம் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரியில் 3750 ஏக்கர் தேயிலை தோட்டமும், கன்யாகுமரியில் 2000 ஏக்கர் ரப்பர் தோட்டத்திலும் இந்த அகதிகள் வேலை பெற்றுள்ளனர்.

மாநில பண்ணைகள் கார்ப்பரேஷனுக்கு மத்திய அரசு ரூ. 80 லட்சம் பங்கு மூலதனம் அளிக்கலாம்.

கார்ப்பரேஷன் 1000 அகதிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

27 லட்சம் பர்மா அகதிகள் வருகை

1964 முதல் 2.7 லட்சம் பர்மா அகதிகள் இந்தியா திரும்பினர். இவ்வருடம் மேலும் 1600 பேர் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாடு, ஆந்திராவில் குடி ஏறுகின்றனர். பர்மா அகதிகளில் 5500 பேர்களுக்கு வியாபாரம் செய்ய கடனுதவப்பட்டுள்ளது. ...

Summary

Scorching Winds Throughout the Morning in Chennai — Reaching Up to 109 Degrees