19.10.1976: சூலூர்பேட்டை அருகில் ஒரு கிராமம் பூராவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

19.10.1976 - Dinamani
சென்னை, அக். 18 - காளஹஸ்தி அருகில் காளிங்கி அணைக் கட்டிலிருந்து பெருகி வந்த நீரின் விளைவாக ஏற்பட்ட உடைப்புகளால் சூலூர்பேட்டைக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமம் சனிக்கிழமை இரவு வெள்ளத்தில் மூழ்கியது. நூற்றுக்கணக்கான கால்நடைகளும், ஒரு நபரும் வெள்ளங்களில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
அந்தக் கிராமத்தில் வெங்கட சுப்ப நாயுடு என்ற விவசாயின் வீடு மட்டுமே வெள்ளத்தில் மூழ்கவில்லை. அவரது வீட்டிற்கு சுமார் 150 கிராமவாசிகள் சென்று அந்த வீட்டின் கூரைமீது இரவு முழுவதும் கழித்தார்கள்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ரமணா ரெட்டி என்ற இளைஞர் இண்டர்மீடியட் படிப்பவர். அவர் இம்மாதம் 24-ந் தேதியன்று பரீட்சை எழுதவிருந்தார். அவரது ஹால் டிக்கெட்டும், புத்தகங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
குடிசைகளில் இருந்த சுமார் 100 நெல் மூட்டைகளும் கிராம மக்களின் உடமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
வெள்ளத்தில் தேசிய நெடுஞ்சாலை
சென்னை - கூடூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்காடாக உள்ளது. சூலூர்பேட்டைக்கு அருகில் சில பகுதிகளில் சாலையில் இரண்டு அடி ஆழம் தண்ணீர் நிற்கிறது. சூலூர்பேட்டைக்கு வண்டிகள் செல்வது தடைப்பட்டுள்ளது. சூலூர்பேட்டைக்குச் செல்ல முயன்ற இரண்டு பெட்ரோல் டாங்கு வண்டிகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.
ரெயில்வே பாதையிலும் வெள்ளம்
சென்னை-கூடூர் ரெயில்வே பாதையிலும் வெள்ளம் புகுந்துள்ளது. சூலூர்பேட்டை-போலிரெட்டிப்பாளையம் இடையே பல இடங்களில் ரயில்வே இருப்புப் பாதைக்குக் கீழான நிலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்புப் பாதை அபாயகரமான நிலையில் உள்ளன. ...
சீன இரு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது
பீகிங், அக். 18 - பூமிக்கடியில் இரு அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாக சீனா இன்று அறிவித்தது. அத்துடன் சீனத் தலைவர் ஹூவா குவா பெங்குக்கு ஆதரவு தெரிவிக்க அது வேண்டுகோள் விடுத்தது.
சீன அணு சோதனைகளின் வெற்றிக்கு ஹூவா தலைமையிலுள்ள கம்யூனிஸ்டு மத்தியக் கமிட்டியே காரணம் என்று சீன ரேடியோ கூறியது.
இந்தச் சோதனை வெற்றிக்குக் காலஞ்சென்ற மா-ஸே-துங் தவிர வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவராலேயே பெருமை என்று சொல்வது இதுவே முதல் தடவையாகும்.
கடைசியாக சீனா அணுகுண்டு சோதனையை நடத்தியது செப்டம்பர் 26-ந் தேதியாகும். அதாவது மா-ஸே-துங் இறந்து 17 நாட்களுக்குப் பிறகு அந்தச் சோதனை நடந்தது.
இப்போதைய சோதனையின் கதிரியக்கத் துகள்கள் மிகவும் கடுமையானது என்று ஜப்பானில் கூறப்பட்டது. ...
Summary
An entire village near Sulurpeta was swept away by floods.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


