137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

18.10.1976: சென்னை அருகே கடலில் 250 மீனவர் தவிப்பு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

18.10.1976 - Dinamani

Updated On :

சென்னை, அக். 17 - சென்னை கடற்கரைக்கு மிக அருகே, துறைமுகத்துக்கு சுமார் 3 மைல் தூரத்தில் ஐம்பது யந்திரப் படகுகள் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் - "திரிசங்கு சொர்க்க நிலையில் அவதிப்பட்டுக் கொண்டு நிற்கின்றன. இவைகளில் சுமார் 250 மீனவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களால் எந்த நிமிடத்திலும் கரைக்கு வர முடியும். ஆனால் படகுகள் கரை சேரும் சமயத்தில் பலத்த காற்று அடித்து விட்டால், படகுகள் நொறுங்கி விடுமே என்று இவர்கள் அஞ்சுகிறார்கள்.

கடலில் காசிமோடு அருகே இந்தப் படகுகள் இருக்கின்றன. 'அந்த இடத்தில் நங்கூரம் பாய்ச்ச முடியவில்லை. ஆகவே படகுகளை இங்குமங்கும் நகர விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் செலவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு படகும் சுமார் ரூ. 1.5 லட்சம் விலை மதிப்புள்ளது. ஆழ்கடலுக்குச் சென்று தான் அவை துறைமுகத்துக்குள் நுழைய முடியும். ஆழ்கடலை நோக்கிப் பத்து அடி சென்றால் காற்று இருபது அடி பின்னால் தள்ளுகிறது. ஆனாலும் ஆழ் கடலில் நுழைவதற்குச் சரியான சமயம் வாய்க்குமா என்று படகில் உள்ளவர்கள் திடத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுபத்திரண்டு மணி நேரமாக இந்தப் போராட்டம் நடக்கிறது. மீனவர்கள் வசம் உணவு இல்லை; தண்ணீர் இல்லை; படகுகளில் எண்ணெயும் குறைச்சலாக இருக்கிறது. நல்லவேளையாக, காசிமோடு மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் காற்று பலமாகிவிட்டால், இதுவும் சாத்தியமில்லாமல் போகும்.

பனை உயர அளவுக்கு எழும் அலைகள் படகுகளை மோதிக் கொண்டிருக்கின்றன. உள்ளே விழும் தண்ணீரை உள்ளேயிருட்பவர்கள் இறைத்து வெளியே ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

துறைமுக நிலவரம்

பலத்த புயல் காற்று அடிப்பதைக் கப்பல்களுக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கைச் சின்னம் இன்று மாலை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த 3 தினங்களில் முதன் முதலாக "அலாஸ்கான் மெயில்" என்ற சரக்குக் கப்பல் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. மூன்று கப்பல்கள் நடுக் கடலில் நிற்கின்றன. மூன்றாவது தினமாக இன்றும் சரக்குகளை இறக்க முடியவில்லை. ஆகையால் துறைமுகத்தில் 9 கப்பல்கள் தேங்கி நிற்கின்றன.

சென்னையில் சுப்ரீம்கோர்ட் பெஞ்சு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை

சென்னை, அக். 17- ஏராளமான ஷரத்துக்கள் கொண்ட அரசியல் சாசனத் திருத்த மசோதா பற்றி மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவது சாத்தியமாக இராது என்றும், ஆனால் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டுமா என்ற அடிப்படைக் கேள்வி தேர்தலின்போது 1971ம் வருட வாக்காளர்களிடையே ஒரு பிரச்னையாக வைக்கப்பட்டது என்றும் மத்திய திட்ட துணைமந்திரி சங்கர் கோஷ் இன்று வக்கீல்கள், மற்றும் சட்ட உதவி தேசீய அரங்கு ஏற்பாடு செய்த மாநில மகாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறினார்.

ஷரத்து வாரியாக கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதோ அல்லது இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இத்தகைய சிக்கலான ஒரு பிரச்னை குறித்து கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதோ சாத்தியமாக இராது என்று அவர் சொன்னார். அரசியல் சாஸனத் திருத்தம் பற்றிய விவாதம் புதிது அல்ல என்றும் 1967 முதல் அது நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார். "வளர்ச்சிக்கு மாறுதல் அவசியம். மாற முடியாத ஒரு அரசியல் சாசனம் தன்னையே அழித்துக் கொள்ளும். ஜனநாயகத்தில் புரட்சியையும், வன்முறையையும் தவிர்க்க அரசியல் திருத்தங்களுக்கு வகை செய்யப்பட வேண்டும்.' என்று அவர் சொன்னார். ...

... உத்தேச திருத்தங்களுக்கு மாநாடு ஆதரவு தெரிவித்தது. சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் பெஞ்சு ஒன்று அமைய வேண்டும் என்று மாநாடு கோரியது. ...

Summary

250 fishermen stranded at sea near Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.