கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

16.10.1976: தமிழ்நாட்டில் பருவமழை மும்முரம் - கனமழை, புயல் எச்சரிக்கை

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

16.10.1976 - Dinamani

Updated On :

சென்னை, அக். 15 - தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டது; கடற்கரை மாவட்டங்களில் விரிவாக பலத்த மழை பெய்துள்ளது; அபாய துறைமுகங்களில் அறிவிப்பு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் பெருமழை காரணமாக மேட்டூரிலிருந்து நீர் விடுவது குறைக்கப்பட்டுள்ளது.

வங்காளக்குடாக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம், இந்த மழைக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

விசேஷ வானிலை அறிக்கை

இன்று மாலை 5-30 மணிக்கு வங்க கடலில் சென்னைக்கு சுமார் 700 கி.மீ. தென் கிழக்கில் பலத்த காற்றழுத்த மண்டலம் இருந்ததாக விசேஷ வானிலை அறிக்கை ஒன்று கூறியது.

அது புயலாக தீவிரமடைந்து வடமேற்கு திசையில் செல்லக்கூடும். அதன் பயனாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு கடற்கரை ஜில்லாக்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பரவலான மழை பெய்யக்கூடும்.

இதே காலத்தில் மணிக்கு 65 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழ்நாட்டின் எல்லா துறைமுகங்களிலும் கடற்கரை பகுதியில் புயல் நிலைமை இருக்கும் என்பதற்கு அபாய அறிவிப்பு கொடி ஏற்றப்பட்டது.

சென்னை நகரிலும், சுற்றுப் புறத்திலும் விட்டு விட்டு சில சமயங்களில் பலத்த மழை பெய்யும், பலத்த தரைக் காற்றும் வீசும். ...

சீனப் பிரதமரை கொல்ல சதி செய்ததாக மாவோ மனைவி மீது குற்றச்சாட்டு

பீகிங், அக்.15 - சீனக் கம்யூனிஸ்டுத் தலைவரும் பிரதம மந்திரியுமான ஹுவா குவா பெங்கைக் கொலை செய்ய சதி செய்ததாக, மாஸேதுங்கின் மனைவி சியாங் சிங்கும் காலஞ்சென்ற மற்றும் மூன்று இடதுசாரித் தலைவர்களும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக சீனர்களிடையே இங்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ள செய்தியிலிருந்து தெரிய வருகிறது.

இந்தச் சதி சம்பந்தமாக ஒரு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக, சில சீனர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறினார். ஆனால் இந்த மூன்று பேர் யார் என்பது தெரியவில்லை. எனினும் மாவின் மனைவியோ அல்லது மற்ற மூன்று தலைவர்களோ என்று புலப்படுத்தும் வகையில் இவ்வாறு கொல்லப்பட்டனர் தகவல் எதுவும் இல்லை என்று இவ்வட்டாரங்கள் கூறின.

மாசே துங்கின் மனைவி சியாங் சிங்கும், மற்ற மூன்று இடதுசாரி தலைவர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சதி செய்தாக கூறும் சுவரொட்டிகள் ஷாங்காய் நகரில் தோன்றின.

அவர்கள் நால்வரின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் கட்சி விரோத சதி புரிந்ததாக அந்தச் சுவரொட்டிகள் கூறின.

அவர்கள் நால்வரும் ஷாங்கை நகரில்தான் பத்தாண்டுகளுக்கு முன்பு கலாசாரப் புரட்சியின் போது அரசியலில் பிரபலமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகிங் பல்கலைக்கழகத்திலும் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால் நான்கு இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அவை குறிப்பிடவில்லை.

கட்சியைப் பிளவுப்படுத்த முயலுபவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று பீகிங் ரேடியோவும் எச்சரித்தது.

Summary

16.10.1976: Monsoon intensifies in Tamil Nadu – Heavy rain, cyclone warning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.