விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்

வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து பலன்பெறுங்கள். 

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 12:47 pm

தினமணி

வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து பலன்பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை -  ஒரு கைப்பிடி

வெந்தயம்                      -  30 கிராம்

சின்ன வெங்காயம்      -  75 கிராம்

ஏலரிசி                             -  ஒரு கிராம்

செய்முறை

முதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், வெந்தயம், ஏலரிசி ஆகியவற்றை  சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை , சிவக்க வறுத்து வைத்துள்ள வெங்காயம், வெந்தயம் , ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி  இறக்கி வடிகட்டி  குடிக்கவும்

பயன்கள்

இந்தக் கசாயம் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மதியம் ,  மாலை என மூன்று வேளையும் வேளையும் தலா 50 மி.லி அளவாக   குடித்து வரவும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 

FOOD CONSULTANCY  CENTER

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell: 96557 58609, 75503 24609

Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.