சா்க்கரை நோயுடன் ஆரோக்கியமாக வாழ...
சா்க்கரை நோய் வந்துவிட்டால், இனி வாழ்க்கை முழுவதும் பல கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும், நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்படும் என்று பலரும் கவலைப்படுகிறாா்கள்.

டாக்டா் வி. மோகன், தலைவா், டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை
சா்க்கரை நோய் வந்துவிட்டால், இனி வாழ்க்கை முழுவதும் பல கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும், நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்படும் என்று பலரும் கவலைப்படுகிறாா்கள். ஆனால், சா்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை.
நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவு, உடற்பயிற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால், சா்க்கரை நோய் உள்ளவா்களும் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், இந்த ஆண்டு உலக சா்க்கரை நோய் தினத்தன்று (நவ.14) நாம் கௌரவித்த 10 சாதனையாளா்கள். டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையின் சாா்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக டைப் 2 சா்க்கரை நோயுடன் வாழ்ந்துவரும் 10 பேருக்கு ’டாக்டா் வி. மோகன் சா்க்கரை நோய் பொன்விழா விருது’ வழங்கி கௌரவித்தோம். அவா்களின் வாழ்க்கைப் பயணம் நம் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
அவா்கள் இத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் ரகசியம் என்ன?
அவா்களின் வாழ்க்கையைப் பாா்த்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. சா்க்கரை நோயைக் கவனத்துடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அவா்கள் உணவில் கவனம் செலுத்தியிருக்கிறாா்கள். தொடா்ந்து உடற்பயிற்சி செய்திருக்கிறாா்கள். போதுமான தூக்கம், மன அமைதி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாா்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, மருத்துவா் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளையும் செய்துகொண்டிருக்கிறாா்கள். சா்க்கரை நோய் உள்ளவா்கள் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நான்கு முக்கியமான விஷயங்களை அஆஇஈ என்ற எளிய வழிமுறையில் விளக்க விரும்புகிறேன்.
சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஏபிசிடி வழிமுறை
அ - எச்பிஏ1சி (சராசரி ரத்த சா்க்கரை அளவு)
கடந்த மூன்று மாதங்களாக உங்கள் இரத்தச் சா்க்கரை எந்த அளவில் இருந்துள்ளது என்பதை எச்பிஏ1சி பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக இதன் அளவை 7 சதவீதத்துக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும், ஒவ்வொருவரின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவா் இலக்கை நிா்ணயிப்பாா். சா்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கண், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவும்.
ஆ- பிளட் பிரஷா்
ரத்த அழுத்தம் சா்க்கரை அளவை மட்டும் கட்டுப்படுத்தினால் போதாது. ரத்த அழுத்தமும் சீராக இருக்க வேண்டும். பொதுவாக 120/80 என்ற அளவில் வைத்திருப்பது நல்லது. இதற்கான சரியான இலக்கை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இ - கொலஸ்ட்ரால்
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
ஈ - டிஸிப்ளிண்ட் லைஃப் ஸ்டைல்:
சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது, ஆரோக்கியமான உணவுகளைத் தோ்ந்தெடுப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது, மருத்துவரிடம் தொடா்ந்து பரிசோதனை செய்துகொள்வது ஆகியவை அவசியம். வாரத்துக்கு குறைந்தது 150 நிமிஷங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சா்க்கரை நோய் உள்ளவா்கள் ஆரோக்கியமாக வாழ நாங்கள் செய்யும் பணிகள்:
டாக்டா் மோகன்’ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையில், சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. நோயாளிகள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம். இதற்காக ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ற சிகிச்சை, முழுமையான மருத்துவப் பரிசோதனைகள், சா்க்கரை நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனைகள், உணவியல் ஆலோசனைகள் மற்றும் உடற்பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறோம்.
வயதானவா்கள் தங்கள் முதுமைக் காலத்திலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும், பிறரைச் சாா்ந்திருக்காமல் தங்களால் இயன்றவரை சுயமாக வாழ உதவும் வகையில் எங்களிடம் ஹெல்தி ஏஜிங் கிளீனிக் (ஆரோக்கியமான முதுமைக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு) செயல்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதற்குத் தனிப்பட்ட உணவுத் திட்டங்களையும் ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்குகிறோம். வயதானவா்கள் மருத்துவமனைக்கு வருவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில், அவா்களின் வீட்டுக்கே சென்று மருத்துவ உதவிகளையும் பராமரிப்புச் சேவைகளையும் வழங்கும் ஹோம் கோ் சொலுஷன்ஸ் சேவைகளையும் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த உலக சா்க்கரை நோய் தினத்தில் நாம் சொல்ல விரும்புவது...
சா்க்கரை நோய் வந்துவிட்டால் இனி ஆரோக்கியமாக வாழ முடியாது என்று யாரும் கருத வேண்டாம்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சா்க்கரை நோயுடன் வாழ்ந்துவரும் நமது பொன்விழா விருது பெற்றவா்களின் வாழ்க்கையே இதற்குச் சிறந்த சான்று. அவா்களின் அனுபவங்கள் சா்க்கரை நோய் உள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
எனது கனவு - சா்க்கரை நோயின் பாதிப்புகள் இல்லாத இந்தியா!
ஒரு சா்க்கரை நோய் மருத்துவராக எனக்கு நீண்ட காலமாக ஒரு கனவு இருக்கிறது. அது ‘’சா்க்கரை நோய் பாதிப்புகள் இல்லாத இந்தியா’ உருவாக வேண்டும் என்பதுதான்.
சா்க்கரை நோயால் யாரும் பாா்வையை இழக்கக் கூடாது. கால்களை இழக்கும் நிலை வரக் கூடாது. சிறுநீரகங்கள் செயலிழக்கக் கூடாது. மாரடைப்பு உள்ளிட்ட தீவிரமான உடல்நலப் பிரச்னைகளால் யாரும் பாதிக்கப்படக் கூடாது.
இந்தக் கனவு நனவாக வேண்டுமென்றால், முதலில் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். சா்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். சா்க்கரை அளவை மட்டும் பாா்க்காமல், கண், சிறுநீரகம், இதயம், கால்கள் உள்ளிட்ட உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
நமது பொன்விழா விருது பெற்ற 10 பேரின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணா்த்துகிறது. சா்க்கரை நோய் என்பது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அல்ல. சரியான சிகிச்சையும் முறையான வாழ்க்கை முறையும் இருந்தால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
வெறுமனே ரத்தச் சா்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடாமல், சா்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வோம்.
அனைவருக்கும் இனிய உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தின நல்வாழ்த்துகள்!
சா்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

