50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!

ஐம்பது வயதுக்குப் பிறகு சிலருக்கு நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஏன்?
Published on

ஐம்பது வயதுக்குப் பிறகு சிலருக்கு நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஏன்?

ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும். இதை MCI – (Mind Cognitive Impairment) அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சனைகள் அல்லது அல்ஜெமர் (Alzheimers) எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்தகைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

சில டிப்ஸ்

வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தால் மறதியை கட்டுக்குள் வைக்கலாம். உதாரணமாக ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து முடித்து விடுவது நல்லது. பொருட்களையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த வேலையைச் செய்து முடித்ததும் அதில் ஒரு டிக் போடுங்கள்.

உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வைக்க வேண்டும். செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலை நிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

போதுமான தூக்கத்தை பெறவில்லையெனில் மறதி அதிகரிக்கும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது.

சத்தான காய்கறிகள், பழங்கள், வால்நட், பாதாம் பருப்பு போன்றவை நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com