பயம் பயம் சாப்பாட்டைப் பார்த்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே பயம்!

இங்கிலாந்தை சேர்ந்த லாரன் லிவின் எனும் இளம் பெண்ணுக்கு ஒரு விசித்தர பிரச்னை இருந்தது.
பயம் பயம் சாப்பாட்டைப் பார்த்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே பயம்!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தை சேர்ந்த லாரன் லிவின் (Lauren Levine) எனும் 22 வயது இளம் பெண்ணுக்கு ஒரு விசித்திர பிரச்னை இருந்தது. சிறுவயது முதல் அவருக்கு உணவைப் பார்த்தாலே ஒருவித அச்சம் எழும். சாப்பாட்டுத் தட்டை அவர் அருகில் கொண்டு சென்றால் தூக்கி விசிறி எறிந்துவிடுவார் அல்லது அந்த இடத்திலிருந்து எழுந்து ஓடிவிடுவார். பழம், காய்கறிகள், இறைச்சி ஆகிய உணவுகள் அவருக்கு கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். தனக்கு ஏற்பட்டிருந்த இந்த போபியாவை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னையால் தண்ணீரைப் பார்த்தால் கூட அவருக்கு பயம். என்ன தான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்று ஆச்சரியமாக உள்ளதா? தினமும் ரொட்டி மற்றும் விதவிதமான நொறுக்கு தீனி ஆகியவற்றை சாப்பிட்டு வந்திருக்கிறார் லாரன். பருவ வயதை அடைந்தும் உடலில் போதிய சத்து இல்லாமல் அடிக்கடி சோர்வுக்கு உள்ளானார். படிக்கும் போதும், விளையாடும் போதும்அவருக்கு கடுமையான தலைவலி அடிக்கடி ஏற்பட்டது.

தவிர தூக்கப் பிரச்னையும் அவருக்கு ஏற்பட்டது. எட்டு மணி நேரம் தூக்கம் போதாமல் தினமும் கல்லூரில் கூட தூங்கி வழிந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி மீது அவருக்கு திடீரென்று ஆர்வம் ஏற்பட அது அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.  அங்கு அவர் சந்தித்த உடற்பயிற்சியாளர் அலெக்ஸ் மோஸ் அவருக்கு நல்ல நண்பரானார். தினமும் உற்சாகத்துடன் லாரன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். அலெஸ் மீது அவருக்கு நட்பு வலுவானது. அலெக்ஸும் லாரெனுக்கு பலவிதமான பயிற்சிகளைக் கற்றுத் தந்து உற்சாகமாக அவரை செய்ய வைத்தார். தற்போது லாரன் பாடி பில்டராகும் அளவுக்குத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறார்.

லாரனே நம்ப முடியாத அளவுக்கு அவரது போபியா அவரை விட்டு நீங்கத் தொடங்கியது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரித்தது. அவர் பார்த்து பயந்த உணவு வகைகளை ஒரு கை பார்க்க ஆரம்பித்துவிட்டார். உணவு வகைகள் பார்த்து பயந்து செத்த அவரது போபியா ஒருகட்டத்தில் குறைய தொடங்கியுள்ளது. தற்போது அவர் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் ஆகிய உணவுகளை விருப்பத்துடன் சாப்பிடத் தொடங்கிவிட்டார். ஆனால் தண்ணீரைப் பார்த்தால் மட்டும் இன்னும் பயம் குறையவில்லை. கூடிய விரைவில் அதையும் சரிப் படுத்திக் கொள்வேன் என்கிறார். தண்ணீர் இன்னும் பிரச்னையாக இருப்பதால் ஜூஸ் குடித்து உடற்பயிற்சி செய்து வருகிறார் லாரன். 

எப்படியோ தெனாலி கமல் போல இருந்தவர் ஒருவழியாக நார்மலானதே பெரிய விஷயம் என்று அவரது ஆண் நண்பர் அலெக்ஸ் மோஸ் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com