வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

டெங்கு காய்ச்சல் தொடரும் பிரச்னை!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த செப்.2 வரை தீவிர சுகாதாரப் பணிகள்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

DIN

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க செப்.2 வரை அனைத்து ஊரக பகுதிகளிலும் முழுமையான சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறுபூச்சிகள் மூலம் பரவும் நோய்களை தடுக்க ஆக. 29 முதல் செப்.2 வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையான சுகாதாரப் பணிகள் நடைபெற உள்ளது.

தெருக்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களில் குப்பைகளை அகற்றவும், மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை, ஊரக வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரப்பணியாளர் ஆய்வு செய்ய வேண்டும். நீண்ட நாள்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளில் முழுமையான ஆய்வு நடத்தவும், பயன்பாடற்ற பானைகள், உரல்கள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம், பழைய டயர், தேங்காய் மட்டைகள், செடிகள் வளர்க்கப்படும் தொட்டிகளின் வடிதட்டு, புதிய கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள் போன்றவற்றையும் கண்காணித்து தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இந்தப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சுரேஷ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பீபிஜான், இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்)(பொ)துரைராஜ், துணை இயக்குநர்கள்(சுகாதார பணிகள்) பழனிச்சாமி(விருதுநகர்), கலுசிவலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தி புகழேந்தி மற்றும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.