இவற்றைத் தவிர்க்க வேண்டுமெனில் இதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கும் போதே ஒருவர் அதைக் கண்டறிந்து ... தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்க வேண்டும். அலுவலகங்களில் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் இருப்பின் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து இடம் மாறி அமர்வதோ, கை, கால்களை அசைப்பதோ அல்லது சின்னதாக ஒரு நடைபயிற்சி மேற்கொள்வதோ என ஏதாவது ஒரு செயலைச் சுறுசுறுப்பாக செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மனித உடலில் இருந்து குறைந்தபட்சம் 770 கலோரி சத்துக்கள் எரிக்கப்பட்டு அந்த சத்துக்கள் ஆற்றலாக மாற்றமடைய வேண்டும் என கனடியன் கார்டியோ வாஸ்குலர் காங்கிரஸ் அமைப்பு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், தினமும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 7 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியோ அல்லது உடலியக்கமோ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் நித்ய கடமையாகிறது.