காய் : தேங்காய் + பேரீச்சை
சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன
தீர்வு
தேங்காய் துருவல் (1 மூடி)
பேரீச்சை கொட்டை நீக்கியது
(100 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)
செய்முறை : முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொண்டு பின்னர் பேரீச்சையை நறுக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய், மல்லித்தழை, தேன் இவை மூன்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.
மாதுளம் செடியின் பட்டையை காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு அவற்றில் 10 கிராம் பொடியை எடுத்து 50 கிராம் தேனை கலந்து அதனுடன் நெல்லிக்காய் மற்றும் கருஞ்சீரகம் தலா 25 கிராம் எடுத்து அரைத்து அதனுடன் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

செங்கோட்டை பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்பு

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



