திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாடு  உடனே  நீங்க

புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து உள்ளது

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:37 pm IST

காய் :  புடலங்காய்  பச்சடி

சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புடலங்காய் தோல் விதையுடன் (200  கிராம்), சாம்பார் வெங்காயம் (3), மிளகுத் தூள் (தேவைக்கேற்ப) கொத்தமல்லித் தழை (1 கைப்பிடி), எலுமிச்சம் பழச்சாறு தோலோடு (1பழம்),  தயிர் (100 மி.லி).

செய்முறை : முதலில் புடலங்காயை சுத்தம் செய்து (தோல், சதை, விதையோடு) சிறிது சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன்  சாம்பார் வெங்காயம், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தயிர் இரண்டையும் ஊற்றி அதனுடன் தேவைக்கேற்ப மிளகுத் தூள், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து  வைத்துக் கொண்டு தினமும் காலை வேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் உண்டாகும் குறைபாடு உடனே நீங்கும்.

(பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுக்கலாம்)

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.