கடந்த பத்தாண்டுகளில், இந்தியர்களின் உணவில் புரதம் என்பது மிகப்பெரிய மாறுதலை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் உடல் வலிமை, தசை வளர்ச்சிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் மறுபக்கம் உடலுக்குத் தேவையான சத்தாகவும் புரதத்தின் மீது கவனம் குவிந்துள்ளது.
ஒரு சராசரி இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் புரதம் என்பதன் பங்கு இன்னமும் விவாதத்துக்குரியதாகவே உள்ளது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக மக்கள் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் புரதத்தின் பங்கும் அதிகரித்துள்ளது.
இந்தியர்களில் பெரும்பாலானோரின் உணவில் சரிவிகித புரதம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது என்றாலும், இது அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் எழுகிறது.
அதாவது, இந்தியர்களின் உணவில் தானியங்கள் வழியாக அதாவது கோதுமை, அரிசி போன்றவற்றின் மூலம் மிகக் குறைந்த புரதமே சேர்கிறது. இவை பருப்புகள், பால் பொருள்கள், கொட்டை வகைகள், முட்டைகள், விதைகளில் அதிகம் கிடைத்தாலும், அதனை இந்தியர்கள் எடுத்துக் கொள்வதும், நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவில் இதன் பங்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இது பற்றி மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், அதிக வேலை நேரம், சத்தான உணவின்மை, மன அழுத்தம், உடல் சார்ந்த வேலைகள் இல்லாமல் இருப்பது போன்றவை இளம் தலைமுறையிடையே தலைசுற்றல், தசை வலுவிழத்தல், குணமடைதலில் தாமதம் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஹார்மோன் சீராக செயல்பட புரதம் அவசியம்.
இதுவரை, பெரும்பாலான மக்கள் புரதத்தின் அளவில் கவனம் செலுத்தி வந்தனர், அதேவேளையில் புரதத்தின் தரம் உண்மையில் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்
எந்த அளவுக்கு புரதம் சாப்பிடுகிறோம் என்ற விழிப்புணர்வையும் தாண்டி, நுகர்வோர் எந்த வகையான' புரதத்தை உட்கொள்கிறார்கள் என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்கிறார்கள்.
அதாவது புரதம் என்பது இனி ஒரு இணை உணவு அல்லது உடற்பயிற்சிக்குப் பிந்தைய பானங்களுக்கானது என்று மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது.
இது காலை உணவு, மதிய உணவு, இடைவேளை சிற்றுண்டி மற்றும் வீட்டில் சமைக்கும் முக்கிய உணவுகளில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய உணவாகும்.
பலரும் புரதம் என்பதை தனியாக ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து மாற வேண்டும்.
இது இந்தியர்களின் உணவு கலாசாரத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டியது இயல்பானதாக மாற்றம் கொண்டு வர வேண்டும்.
எனவே, கடைகளில் புரதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் உணவுகளை மட்டும் வாங்கி சாப்பிடாமல், அன்றாட உணவில் சமைக்கும்போது புரதத்தை எவ்வாறு இயல்பாக சேர்த்துக்கொள்வது என்பதைத்தான் சிந்திக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் விளம்பரங்களுக்கு விட்டில் பூச்சியாகக் கூடாது. புரதம் என்பது உணவு மூலமாக இயற்கையான வழியில் சேர்க்கப்பட்டு அது உடலுக்கு நலத்தை பயப்பது மட்டுமே இலக்காக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
Summary
About the awareness that protein is essential in the diet of Indians.
மேலும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...

திருமண நிகழ்வில் உணவு நஞ்சானதாக சந்தேகம்! 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


