8. உங்கள் கழுத்து வலிக்கு காரணம் என்ன?

இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான கழுத்து வலியுடன் வந்த 24 வயதேயான
8. உங்கள் கழுத்து வலிக்கு காரணம் என்ன?
Published on
Updated on
3 min read

இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான கழுத்து வலியுடன் வந்த 24 வயதேயான பெண்ணுக்கு பல கேள்விகள் எழுப்பியும் கழுத்து வலியின் முக்கிய காரணத்தை கண்டறிய முடியாத நிலையில், சில பொதுவான வினாக்கள் எழுப்பினேன். ‘நீங்கள் வேலை செய்யும் இடத்தின் நாற்காலிகள் உங்கள் கணிப்பொறியின் திரையின் அளவும் உங்கள் கண் பார்வையும் ஒரே நேர்கோட்டில் அமையுமாறு உங்கள் மேஜை அமைக்கப்பட்டுள்ளதா? செல்போன் எவ்வாறு உபயோகிப்பீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில்கள் இல்லை என்பதே. தவறான முறையில் அமைக்கப்பட்ட நாற்காலிகள் மேஜைகள் போதுமான அளவு இல்லாத கணினித்திரையின் உயர அமைப்பு எல்லாமும் ஒட்டுமொத்த காரணமாக அமைந்து, அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் ERGONOMICS என்று கூறுவார்கள்.

நாமும் நம் பணி புரியும் இடமும் சில எலும்புகள் தசை சார்ந்த வலிகளுக்கோ அல்லது மாறுபாடுகளுக்கோ காரணமாக அமைவதை ERGONOMICAL DISORDER என்பார்கள். அதாவது பணியில் உள்ள இடங்கள் அதாவது சுற்றுபுறம் தொடர்பான விளைவுகள் என்று கூறலாம். தொடர்ந்து சரியான நாற்காலிகள் உபயோகிக்க முடியாமல் முதுகு வலியால் அவதிப்படும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுனர்களை உதாரணமாக கூறலாம். எனது நண்பர் ஒருவர் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். இந்த நாற்காலி பிரச்னை சம்மந்தமாக தனது பாடத்தை தரையில் அமர்ந்தே நடத்துவதாகக் கூறினார். ஓட்டுனர் நிலைமை இன்னும் பரிதாபம். அவரால் தனது பணிக்காலம் முழுவதும் அதே வலியுடன் தான் பணி புரிய வேண்டியுள்ளது. அதிகம் போனால் ஒரு தலையணை வாங்கி பின்புறம் வைத்து கொண்டே பயணிக்க வேண்டியது தான். அவரின் பணிக்கால முழுவதும் வலியுடன் வாழ வேண்டும் என்பது துயரம். இதற்கு எந்த மாற்றமும் செய்து தர பேருந்து நிர்வாகம் தயாராக இருக்காது.

இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற மாறுதல் மாற்றங்கள் நாம் எதிர்பார்க்கவே முடியாத நிலையில்தான் உள்ளோம். சுமார் 10 மணி நேர பேருந்து பயணத்துக்கு பின் அனைவருக்கும் நிச்சயம் முதுகு வலி ஏற்படத்தான் செய்யும். ஏனெனில் பேருந்து நாற்காலிகளின் வடிமைப்பு அத்தகையது. இதனை யாருமே பெரிதாக கண்டு கொள்ளாத நிலை. பக்கத்துக்கு மருந்து கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு அதனை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் கடந்து போய் விடுவோம். இதற்கான தீர்வுகள் இப்படி நாற்காலிகள் சரியான முறையில் அமையாத பணி இடத்தில் தொடர்ந்து வேலை செய்யும் போது வரும் பல்வேறு பிரச்சனைகளில் முதுகு வலியும், கழுத்து வலியும் தோள்பட்டை வலியும் வருவது உறுதி,

இன்னும் சில நோய்கள் தொடர்ந்து நின்று கொண்டே பணிபுரிவதால் ரத்த குழாய்கள் தொடர்ந்து விரிவடைந்து ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து அல்லது தேங்கிப் போகலாம். இதனை ஆங்கிலத்தில் VARICOSE VEIN  என்பார்கள். இது போன்ற தொழில் சார்ந்த நோய்களை தடுப்பது நம் கையில் இருக்கிறது. வியாதிகள் வருவதை தடுப்பது எளிது வந்த பின் சரி செய்வது எப்போதுமே மிகவும் கடினம். அடுமனையில் பணியில் உள்ள நண்பர் ஒருவர் மருத்துவம் பார்க்க வந்தார், அவரின் முதுகு வலிக்கு நீங்கள் தொடர்ந்து நிற்பதே முக்கிய காரணம் என்று கூறிய பின் அதற்கான சின்ன சின்ன மாறுபாடுகள் பரிந்துரைத்து அனுப்பிய பின் அதனை உணர்ந்து சரி செய்த பின் கடுமையான முதுகு வலியின் தொடர் அவஸ்தையிலிருந்து தப்பித்தார்.

நோயின் காரணத்தை சரி செய்து, பாதிக்கப்பட்ட நபரை மருந்து எடுத்து கொள்ளாமல் குணப்படுத்த உதவும் எர்கநோமிக் கல்வி மிக அவசியமாகிறது. பெங்களூர் போன்ற வளர்ந்த நகரங்களில் பல்வேறு கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு எர்க்நோமிக் கல்வியை பிசியோதெரபி மருத்துவர்கள் கொண்டு தொடர்ந்து விளக்கிய வண்ணம் உள்ளார்கள். உதாரணமாக நாம் கணிப்பொறி முன் அமர்ந்து பணியில் இருக்கும் போது நம் கழுத்தை சுற்றியுள்ள தசைகள் தொடர் அழுத்தம் காரணமாக பல்வேறு வேதியல்ரீதியான மாற்றங்களை சந்தித்து கடைசியில் தனது சக்தியை இழந்து வலு குறையும் போது, நமக்கு கழுத்து வலியாக அது வெளிப்படும். கணிபொறியின் முன் அமரும் போது கழுத்து பகுதி போதுமான அளவு ஓய்வில் இருக்குமாறு நம் நாற்காலி வடிமைக்கபட வேண்டும். இத்தகைய நாற்காலிகளை தமது பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்க முன் வருவதன் மூலம் அவர்களது வேலைத் திறன் அதிகரிப்பதுடன், பணியாளரின் உடல் நலமும் காக்கப்படும்.

- T. செந்தில்குமார்                                                                                                                  பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்                                   ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி                                                                 சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். செல் - 8147349181

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com