18. சுடு நீர் ஒத்தடம்

கை கால் வலிக்கும் சுடு நீர் ஒத்தடம் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?
18. சுடு நீர் ஒத்தடம்

கை கால் வலிக்கும் சுடு நீர் ஒத்தடம் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?

எது மாதிரியான வலிகளுக்கு சுடு நீர் ஒத்தடம் கொடுக்கலாம்?

இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இந்தக் கட்டுரை. பொதுவாக வலிகளை மருத்துவ உலகம் பல்வேறு வகைகளாகப் பிரித்து அதற்கு தகுந்தாற் போல மருத்துவம் அளிக்கிறது. அதாவது நாள்பட்ட வலிகளுக்கு தனிபட்ட மருத்துவம் கொடுப்பதும், அடிபட்ட காயங்களால் ஏற்படும் வலிகளுக்கு வேறு மருத்துவமும், புற்றுநோய் மற்றும் வாழ்வின் கடைசி நேரத்தில் வரும் வலிகளுக்கு வேறுபட்ட வலி மருத்துவம் என வலிகளுக்கு தரப்பட்டும் மருத்துவம் பல்வேறு வகைமையைக் கொண்டுள்ளது. பிசியோதெரபி மருத்துவத்தைப் பொருத்தவரை நாங்கள் மருத்துவம் செய்வது பொதுவாக நாள்பட்ட வலிகளாகவே இருக்கும். முதுகுவலி மூட்டு வலி தோள்பட்டை வலி கழுத்து வலி குதியங்கள் கால் வலி என வலிகள் அனைத்தும் நாள் பட்ட வலிகளே.

முன் காலத்தில் உடலில் ஏற்படும் வலிகளுக்கு பொதுவாக வலிகளுக்கு சூடு ஒத்தடம் அதாவது வேது கொடுப்பார்கள், வேது கொடுப்பது என்பது எனக்கு தெரிந்தவரை சோளத் தட்டு அல்லது ஆற்று மணலை வாணலியில் போட்டு வறுத்து நன்றாக சூடாகும் வரை வைத்து, பின்பு அதனை ஒரு மெலிதான துணியால் காட்டி, வலிக்கும் பகுதியின் மீது வைத்து வைத்து எடுப்பார்கள். ஆங்கிலத்தில் இதனை காய்ந்த வெப்பம் (DRY HEAT) என்பார்கள்.

வலியின் தீவிரம் கண்டிப்பாக குறைந்தாலும், மிக அதிகப்படியான சூட்டை தோல் மீது வைக்கும் போது உடனே கொப்புளங்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதாவது தீக்காயங்கள் ஏற்பட பலமான வாய்புகள் உள்ளது. இதனை தடுக்கவே சமீப காலங்களில் மருத்துவர்கள் கூறும் அறிவுரை நீரை நன்றாக காய வைத்து அதில் சிறிதளவேனும் கல் உப்பு சேர்த்து பின் துணியில் நனைத்து நன்றாக பிழிந்து விட்டு வலிக்கும் இடத்தின் மீது வைத்து சொல்வார். சுடு நீர் ஒத்தடம் கொடுங்க இந்த மாத்திரையும் சாப்பிட்டு விட்டு என்பார், மாத்திரையால் வலி சரியாக விட்டாலும், சுடு நீர் ஒத்தடம் தொடர்ந்து கொடுத்து வருவதால் கண்டிப்பாக வலியின் தீவரம் குறைவதோடு மாத்திரையின் தேவையும் குறைந்து போய்விடும்.

உடம்பில் வலிகள் அல்லது காயங்கள் ஏற்படும் போது அதனை மூளைக்கு கடத்திச்செல்ல உடம்பில் பல்வேறு வேதியில் பொருட்கள் சுரக்கின்றன. இந்த வேதியல் பொருட்களின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது வலி நரம்புகள் தூண்டப்பட்டு கடுமையான வலியை மூளை உணர நேரிடுகிறது. இந்த வேதியல் பொருட்கள் சுரப்பதை தடுக்கவோ அல்லது சுரந்த பொருட்களை காயங்கள் பட்ட இடத்திலிருந்து அப்புறபடுத்துவது மிக முக்கிய வேலை, இதனால் காயம் பட்டவருக்கு நம்பிக்கை வருவதோடு நன்றாக காயங்கள் ஆறுவதை காணலாம்.

சுடு நீர் ஒத்தடம் கொடுத்தால் மட்டும் போதுமா?

ஆம் போதும், வேறு ஏதேனும் மாத்திரை வேண்டாமா, என்பார், கண்டிப்பாக எங்கிருந்தாலும் சுடு நீர் ஒத்தடம் கொடுப்பதால் மேற்கூறிய வேதியல் பொருட்கள் காயமோ அல்லது வலி உருவான இடத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியேறுவதால் உடனே வலி நிவாரணம் நடப்பது உறுதி. சுடு நீர் கொடுப்பதால் வலி எவ்வாறு குறைகிறது இங்கே விளக்கி கூறுகிறேன். காயங்கள் அல்லது வலிகள் ஏற்படும் போது உடம்பில் உள்ள ரத்த குழாய்கள் சுருங்கி போவதால் அந்த இடத்தில சுரக்கும் வேதியல் பொருட்கள் அங்கேயே தங்கி விடுவதால் வலியை தொடர்ந்து தூண்டி கொண்டே இருக்கும். இதனை மருத்துவ உலகம் ACUTE PAIN என்பார்கள்.

நீங்கள் கொடுக்கும் சுடு நீர் ஒத்தடம் காயங்கள் சுற்றியுள்ள இடங்களில் ரத்த குழாய்கள் சுருங்கி  கொண்ட நிலையில் இருந்து விரியும் நிலைக்கு மீண்டும் வருவதால் வலி நிவாரணம் பெறும். நாள் பட்ட வலிகளும் இது போன்று செய்யும் போது வலிகள் குறைவதை உணர முடியும். அதனால் பழைய வைத்திய முறையான சுடு நீர் ஒத்தடம் தவிர்ப்பதும், ஈரப்பதம் கூடிய சுடு நீர் ஒத்தடம் கொடுப்பதும் மிக சரியான வேதியல் மாற்றத்தை உடலில் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் செய்து விடுகிறது. எனவே எந்த நாள் பட்ட எலும்பு தசை சார்ந்த நாள்பட்ட வலியாக இருந்தால் சுடு நீர் ஒத்தடம் கொடுப்பது மிக அவசியம்.   

இதற்கென தனிப்பட்ட முறையில் சுடு ஒத்தடம் கொடுக்க நவீன செய்முறைகள் உள்ளன. அதனை பற்றி வரும் காலங்களில் விளக்கி கூறுகிறேன்.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com