சுடச்சுட

  

  31. முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை!

  By டாக்டர் செந்தில்குமார்  |   Published on : 25th October 2017 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  back_pain

   

  வலிகள் எதனால் வருகிறது என்ற காரணத்தை உற்று நோக்கி அதனை சரி செய்ய முயன்றாலே 60 சதவிகித வலிகளுக்கு தீர்வு கண்டு விடலாம். குதி கால்களில் ஏற்படும் வலிகளுக்கு முக்கியக் காரணம் உங்கள் செருப்பாக இருக்கலாம், கழுத்தில் ஏற்படும் வலிகளுக்கு முக்கிய காரணம் உங்கள் தலையணை அல்லது உங்கள் செல்போன் பயன்படுத்தும் முறை, கணிப்பொறி முன் அமரும் முறை போன்ற பொதுவான காரணமாக இருக்கலாம், முதுகுவலிக்கு முக்கிய காரணம் நீங்கள் அமர்ந்து கொள்ளும் முறை, உங்கள் உடம்பின் தசைகளின் இலகுத்தன்மை. இது போன்று, தெரிந்தோ தெரியாமலோ நீங்களே செய்யும் வினைககள்தான் உடம்பில் ஏற்படும் பெரும்பாலான வலிகளுக்கு காரணங்கள்.

  இதற்குத் தீர்வு, சரியான காலணிகள் அணிவது, சரியான முறையில் அமர்வது போன்றவை. சிற்சில மாற்றங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உங்களின் நிரந்தர வலியை இல்லாமல் செய்துவிடும். இதற்கெனவே சிறப்பான முறையில் வடிமைக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன. உங்கள் அலுவலக பணியின் போது உபயோகிக்கும் நாற்காலிகள் சரியான அமைப்பில் இருப்பது போன்றவற்றில்  கவனம் செலுத்தினால் உங்களுக்கு பிற்காலத்தில் ஏற்படக் கூடும் முதுகு வலியோ அல்லது கழுத்து வலியோ அல்லது கணுக்கால் வலியோ வராமல் தவிர்த்து கொண்டே வரலாம்.

  ஆடம்பர வடிவில் வரும் நாற்காலிகள் பீன் பேக் போன்ற வடிமைப்பே இல்லாத நாற்காலிகள் ஏற்படுத்தும் சிரமம் உங்களுக்கு உடனே தெரிய வாய்ப்புகள் இல்லை, இதனை பற்றிய ஒரு தனிப் பதிவை வரும் நாட்களில் தருகிறேன். சில நேரங்களில் வரும் தொலைபேசி அழைப்புகள், இதுவே எனது பதிலாக இருக்கும், உதாரணமாக 21 வயது கல்லூரி செல்லும் இளைஞன் கடுமையான முதுகு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டான், மருந்துகள் உதவில்லை, மருத்துவர் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்தார், ஸ்கேன் ரிப்போர்ட் என்ன என்று சொல்லுங்கள், டாக்டர் கடுமையான முதுகு ஜவ்வு விலகல் இருக்கிறது இனிமேல் உங்கள் வாழ்க்கையே முழுவதும் வலியோடு தான் வாழப் பழக கற்றுக்கொள்ள வேண்டும் என்று  கூறினார், என்ற பயக்குரல், மனதை என்னவோ செய்தது.

  இன்னொரு 26 வயது மதிக்கத்தக்க பெண் கடுமையான முதுகு வலியில் அவதிப்பட்டார். எனக்கு இப்பொழுது தான் முதல் குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிறது, எனது மருத்துவர் உங்கள் முதுகு ஜவ்வு விலகல் ஏற்பட்டு இருக்கிறது, இனிமேல் உங்கள் உங்கள் குழந்தையை கூடத் தூக்க கூடாது என்கிறார்கள், இதற்கு வேறு எதுவும் எதாவது தீர்வு உள்ளதா என்று போனில் அழுதார்.

  ஒரு பெண்மணி கடந்த இரண்டு வருடங்களாக முதுகு வலி காரணமாக தன்னால் பஸ்சில் பயணிக்க முடியவில்லை, சமையல் செய்ய முடிவில்லை என்று வருத்தப்பட்டார். இவர்கள் அனைவருக்கும் ஒரே பதில் முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை, சரியான உடற்பயிற்சிகள் சரியான் பிசியோதெரபி மருத்துவம், வலியின் காரணத்தை அறிந்து அந்த காரணங்களை செய்யாமல் இருப்பது தான் பிரச்னைகளை அதிகப்படுத்திவிடும்.

  உதாரணமாக நீங்கள் அமரும் பைக்கின் வடிமைப்பு உங்கள் முதுகு வலிக்கு காரணமாக தோன்றினால் பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையோடு பைக்கை மாற்றுங்கள். அல்லது உங்கள் இருக்கையின் வடிவமைப்போ படுக்கையோ காரணமாக தோன்றினால் அதனை சரி செய்வது முக்கியமான மாற்றத்தை உங்கள் உடலில் ஏற்படுத்தி, வலியில் இருந்து விடுதலை தரும். சரியாக பரிந்துரைக்கப்படும் முதுகு வலி பயற்சிகள் பிசியோதெரபி பயற்சிகள் உங்களின் முதுகு வலிக்கு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாகும். அதற்கென நீங்கள் தேடிச் செல்லும் பிசியோதெரபி மருத்துவர் நல்ல கைதேர்ந்த நிபுணராக இருப்பது மிக முக்கியம். இது போன்ற வலிகள் எப்பொழுதும் நிரந்தரம் இல்லை, சரியான தீர்வுகள் இருக்கும் வரை அதைக் கண்டறிந்து நிவாரணம் பெறுவது நல்லது. வாழ்வது நாம், வலிகளோடு பயணிப்பது வீண்.

  தொடரும்

  T. செந்தில்குமார்,

  பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

  ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

  சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

  8147349181

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai