டாக்டர் என்ன சாப்பிடலாம்?

நமக்கு நோய் என்று ஒன்று வந்தால் உடனே டாக்டரைப் போய் பார்க்கிறோம். மருந்து சீட்டை
டாக்டர் என்ன சாப்பிடலாம்?
Updated on
2 min read

நமக்கு நோய் என்று ஒன்று வந்தால் உடனே டாக்டரைப் போய் பார்க்கிறோம். மருந்து சீட்டை எழுதியவுடன் நாம் டாக்டரிடம் கெட்கும் முதல் கேள்வி, ‘டாக்டர் என்ன சாப்பிடலாம்?’ எல்லா நோய்களுக்கும் மருந்துடன் உணவும் நோய் தீர்க்கும் ஒரு முக்கிய பங்கை வகுக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

சில நோய்களுக்கு உணவே மருந்தாக அமைகிறது என்பதை நாம் சமீபத்தில் மறந்துவிட்டோம். ஒரு ஆறு மாதத்துக்கு முன்பு அமெரிக்கா நாட்டிற்குப் பயணம் செய்திருந்தேன். அப்போது வெர்ஜினியா என்ற நகரத்தில் என் தங்கை வீட்டில் தங்கி இருந்தேன். என் தங்கையின் கணவரின் அலுவலகத்தில் பணியாற்றிய How என்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் எங்களை அன்புடன் அவருடைய வீட்டுக்கு அழைத்தார். நாங்களும் சென்றோம். பல விஷயங்களை பகிருந்து கொண்டோம். நன்கு உபசரித்தனர்.  உபசரித்து வீடு கிளம்பும் போது ஹெளவின் மனைவி உள்ளே சென்று ஒரு அழகான சிவப்பு நிற பையில் ‘a small gift’ என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நானும் புன்முறுவலுடன் நன்றி கூறி வாங்கிக் கொண்டேன். காரில் ஏறி வீடு திரும்பும் போது அந்தப் பையில் என்ன இருக்கு எனப் பிரித்துப் பார்த்தேன். ‘Healthy cookery’ என்று எழுதப்பட்ட ஒரு பையில் நாம் சமையலுக்கு உதவும் மஞ்சள் தூள் ஒரு பாக்கெட்டும், அதே அளவு சீரகம் ஒரு பாக்கெட்டும் இருந்தது. ஆச்சரியத்தில் மெளனமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

மஞ்சளே சேர்க்காமல் சமைக்கப்படும் துரித உணவுகளின் மீது என் மனம் சென்றது. எந்த விஷயமாக இருந்தாலும் அது அமெரிக்காவிலிருந்து வந்தால் அதற்கு நாம் தரும் தனி மதிப்புத் தான் என்ன? நம் நாட்டுச் சமையலில் மஞ்சள் இல்லாமல் சமைத்ததே இல்லை. இந்த மஞ்சளின் பெருமை இனி உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. மஞ்சளில் இருக்கும் ‘Curcumin’ என்ற வேதிப் பொருள் நூற்றுக்கும் மேலான புற்றுநோய் வகைகளைத் தடுக்க வல்லது. ஒரு வகைக் குடல் புற்றுநோய் இந்த மஞ்சளை உபயோகிப்பதால் இந்தியர்களைத் தாக்குவதில்லை. மஞ்சள் காமாலை நோயாளிகள் மஞ்சளை உணவில் சேர்க்கக் கூடாது என்பது ஒரு மூட நம்பிக்கை. உணவில் சேர்க்கும் மஞ்சளுக்கும் உடம்பில் வரும் மஞ்சள் காமாலை நோய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அடுத்ததாக சீரகத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

வயிற்றுச் சம்மந்தமான எல்லா நோய்களுக்கும் சீரகம் ஒரு நல்ல ஒளஷதம். நோய் எதிர்ப்புத் தன்மையுடன் வயிற்றுப் புண்களையும் ஆற்றும் தன்மை பெற்றது. ஒரு அரை டீஸ்பூன் சீர்கத்தை வாயில் போட்டு சிறிது சிறிதாக மென்றால் வாய் துர்நாற்றம் குடல்புண் போன்ற பிரச்னைகளிலிருந்து முழு தீர்வு பெறலாம்.

Cholestral உள்ளவர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தினமும் 1 ½ டீஸ்பூன் வெந்தயத்தை காலையிலும் மாலையிலும் உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம். இதை உணவு உட்கொள்வதற்கு ஒரு ½ மணி நேரத்துக்கு முன் உட்கொள்ள வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது லேசாக வறுத்து தூளாக்கி நீரிலோ மோரிலோ கலந்து உட்கொள்ளலாம்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சாப்பிடும் அளவை, சிறிது சிறிதாகக் குறைத்து விடலாம். இதை உட்கொள்ளும் போது நோய்க்கான மருந்துகளை நிறுத்திவிடக் கூடாது.

‘பூண்டைத் தின்றவர் ஆண்டை வென்றார்’ என்பது பழமொழி. ஆனால் புதிய ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன? பூண்டிலிருக்கும் ஒருவகை நார்ச்சத்து இருதயத்தைப் பலப்படுத்தி நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது. பூண்டு ஒரு உணவாகவும், மூலிகையாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

ரத்தக்குழாயில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி சத்தும் அதிகமுள்ளது. இதில் இருக்கும் ஒரு வகைச் சத்து தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com