

ஏலக்காய், தனியா, நெருஞ்சில் - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
ஏலக்காய், சீரகம் -50 கிராம் எடுத்து எலுமிச்சைச் சாற்றில் (100 மில்லி) ஊறவைத்து காயவைக்கவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனோடு கலந்து சாப்பிட்டால் தலைவலி , மயக்கம் குணமாகும்.
ஏலக்காய் , வெள்ளரி விதை - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து , காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் , நீர் அடைப்பு , கல் அடைப்பு அனைத்தும் குணமாகும்.
ஏலக்காய் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் , வாய் நாற்றம் , பல் அரணை , ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.
ஏலரிசி , சுக்கு , கிராம்பு , சீரகம் - தலா 50 கிராம் எடுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், குடல் புண் , வயிற்று வலி போன்றவை குணமாகும்.
ஏலக்காய் ,ஆவாரம் பூ , சுக்கு - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் இதய நோய் , இதய பலவீனம் போன்றவை குணமாகும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.