ஆரோக்கிய ரெசிபி!

சமைக்கும் போது சத்துக்களை இழந்துவிடாமல் பெற என்ன செய்யலாம்? இதோ எளிய இயற்கை உணவு தயாரிப்புக்கள் சில..
ஆரோக்கிய ரெசிபி!
Published on
Updated on
1 min read

சிலர் சமைத்த உணவை அடிக்கடி சூடு படுத்துவார்கள். இன்னும் சிலர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த உணவை எடுத்து அப்படியே அடுப்பில் வைத்து சூடுபடுத்துவார்கள். இதனால் உணவின் தன்மை கெடுவதுடன் சத்துக்களும் இழக்கப் படுகின்றன. எளிய இயற்கை உணவுத் தயாரிப்புக்கள் சிலவற்றை அவ்வப்போது தயாரித்து உடனுக்குடன் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை நாம் பேணிக் கொள்ள முடியும்.

வாழைப்பூ மடல் சூப்:

வாழைப்பூ மடலைப் பொதுவாக தூக்கி எறிந்துவிடுவோம். இதில் சூப் தயாரிக்கலாம். வாழ்கைப்பூவின்  மடல்கள் இரண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கு, ஐந்து பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம், தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால் வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம். ஹீமோகுளோபின் வளம் அதிகமிருக்கும் இந்த சூப்பை  குழந்தைகளும் விரும்பி குடிப்பார்கள்.

காய்கறி சாலட்:

வெள்ளரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் ஆகிய காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு கலக்கவும். நைசாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையை  தூவுங்கள். சத்தான சுவையான புத்துணர்வூட்டும் காய்கறி சாலட் தயார்.

பழங்கள் சாலட்:

மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக்கி அதில் மாதுளை முத்துக்களையும் பன்னீர் திராட்சையும் கலக்கவும்.  இந்தப் பழங்கள் தான் என்றில்லை, வீட்டில் இருக்கும் பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் உலர் திராட்சை சேர்த்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

பீட்ரூட் அல்வா:

தேவையான பொருட்கள் 
பீட்ரூட் - 1/4 கிலோ
பால் - 1/4 லி
சர்க்கரை - 150 கிராம்
பசுநெய் - 50 கிராம்
ஏலக்காய் - .2
முந்திரி - 10

செய்முறை:

பீட்ரூட்டை சுத்தமாக்கி தோல் அகற்றி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் நன்றாக (நீர் கலக்காமால் - தேவையெனில் சற்று பால் சேர்த்து) அரைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில் முக்கால் பங்கு பசுநெய்யை ஊற்றி ஏலக்காய், பொடிதாக நறுக்கப்பட்ட முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அரைக்கப்பட்ட பீட்ரூட்டை வாணலியில் போடவும். பின்னர் பாலை வாணலியில் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். இவை வற்றி கெட்டியானதும் சர்க்கரைச் சேர்த்து விட்டு மீண்டும் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். மீதமிருக்கும் பசுநெய்யை ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சுவையான பீட்ரூட் அல்வா ரெடி. குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com