இன்றைய மருத்துவ சிந்தனை: எருக்கம்

மூக்கடைப்பை நீக்கிவிடும்
இன்றைய மருத்துவ சிந்தனை: எருக்கம்
Updated on
1 min read

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 
எருக்கம்:

  • எருக்கம் இலையை வதக்கிக்  கட்டகள் உள்ள இடத்தில் கட்டி வந்தால், கட்டிகள் பழுத்து உடையும்.
  • செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்க இலையின் பழுத்த இலையை 4 வரிசையாக அடுக்கிக் அதன்மேலே குதிகாலால் அழுத்தி மிதித்து வந்தால் குதிகாலில் ஏற்படும் வலி நீங்கும்.
  • எருக்கம் இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுத்து வந்தால், ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் உடனடியாக குறைந்துவிடும்.
  • எருக்கம் இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்து வரும் சாற்றை மூக்கினுள் 4 சொட்டுகள் விட்டுவந்தால்  உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட்டால்  தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.
  • எருக்கம் செடியின் பழுத்த இலைகளின் சாற்றை எடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக  சூடாக்கி காதினுள் விட்டுவந்தால் காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.
  • எருக்கம் இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
  • எருக்கம் செடியின் காய்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.
  • எருக்கம் இலைச்சாறு எடுத்து அதனை மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் கொதிக்க வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
  • எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வேகவைத்து  அந்த தண்ணீரில் மஞ்சள்(4) சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில்அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
  • எருக்கம் பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
  • எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச்  சுண்டைக்காய் அளவுக்கு காலை மாலை என இரூவேளையும் சாப்பிட்டு வந்தால் உடலின் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும்.
  • எருக்கம் பாலை மஞ்சள் தூளுடன்  கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசிவந்தால் கருவளையம் மறைந்து முகம் பொலிவு பெறும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com