தினந்தோறும் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்!

ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்தது முதல் இறப்பு வரை பால் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினந்தோறும் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்!
Published on
Updated on
2 min read

ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்தது முதல் இறப்பு வரை பால் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே, இறந்தாலும் பாலை ஊற்றுவார்' என்ற வாழ்வே மாயம் பாடலில் கவிஞர் வாலி குறிப்பிட்டிருப்பது நினைவில் இருக்கலாம். 

மற்ற உணவுப் பொருட்களை விடவும் பால் தூய்மையானது. அதிகமான புரதம் உடையது. பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது. முட்டையில் கிடைக்கும் அல்புமின் என்ற சத்து பாலிலும் உள்ளது. ஒரு க்ளாஸ் பாலும், ஒரு அவித்த முட்டையும் சிறந்த சத்துணவாகவே கருதப்படுகிறது. பெளத்த துறவிகள் நீண்ட நாட்கள் தியானம் செய்யும் போது உணவினைத் தவிர்த்துவிடுவார்கள். பழம் அல்லது பால் மட்டுமே அவர்களது ஆகாரமாக இருக்கும்.

இரவில் உடல் ஓய்வு எடுக்கும் நிலையில் உறுப்புக்கள் காலை வரை இயங்க சத்தும் ஊட்டமும் தேவை என்பதால் தினமும் இரவில் ஒரு தம்ளர் பால் குடிப்பது நல்ல பழக்கமாக கருதப்படுகிறது.

பாலில் உடலுக்குத் தேவையான கால்ஷியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரைஃபோஃபோவின் போன்ற சத்துக்கள் உள்ளன. பால் சாப்பிட உடனே செரிமானம் ஆகிவிடும்.  

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத உணவாகும். எலும்பு வலுவடையவும், மூளைத் திறன் அதிகரிக்கவும் பால் மிகவும் அவசியமான உணவு. டீன் ஏஜ் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் உடல் போஷாக்கிற்கும் பால் மிகவும் முக்கியம். பெண்களுக்கும் பால் சிறந்த உணவு. 

பெண்கள் இரவில் ஒரு க்ளாஸ் பால் குடித்துவிட்டு உறங்கினால் வயிற்றுவலி, மாதவிலக்கு போன்ற சமயத்தில் வரும் பிரச்னைகளை சரி செய்யும்.

உடல் மெலிவாகவும், பலவீனமாகவும் இருந்தால் தினமும் மிதமான சூட்டில் ஒரு க்ளாஸ் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறீதளவு நெய் கலந்து குடித்துவர உடல் நன்கு தேறிவிடும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே பால் அருந்தினால் சரியாகிவிடும். பாலில் இயற்கையாக உள்ள சர்க்கரை சத்து உடல் நலத்தை மேம்படுத்தும் லாக்டோஸ் என்று அழைக்கப்படும் இச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிலருக்கு இந்த லாக்டோஸ் அலர்ஜியாக இருக்கும். பால் தயிர் போன்ற பொருட்களை அவர்கள் தவிர்த்துவிடுவதே நல்லது. அல்லது மருத்துவரின் பரிந்துரையின்படி பாலை அளவாக எவ்விதம் எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்டு அதற்கேற்றபடி அதனை அருந்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com